75 வீதமானவை தொற்றாத நோய்களினால் மரணம்

இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 75 வீதமானவை தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையில் ஐ.நா. பிரதிநிதிகள் குழுவொன்று ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இவ்வுண்மை கண்டறியப்பட்டுள்ளது.

மதுபாவனை, புகையிலைப் பாவனை, முறையற்ற உணவுப் பழக்கம் இதற்குக் காரணம் எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!