கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!!
நாட்டின் பல பகுதிகளிலும் கோழி இறைச்சியின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 450 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் தற்போதைய விலை 700 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொழும்பு பஸ்டியன் வீதியில் இந்த விலை காணப்படுகிறது.
இன்னும் சில பிரதேசங்களில் விலை 900 ரூபாவை கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கோழி இறைச்சியின் விலை இவ்வாறு உச்சம் கண்டதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S