சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்..!!

இது அண்மைய மாதங்களில் சீனாவிலிருந்து மூன்றாவது முக்கியஸ்தர் ஒருவரின் உத்தியோகபூர்வமான விஜயமாக அமையவுள்ளது.

ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் பெங் கடந்த வாரம் நாட்டிற்கு வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் தனது பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளார் என்பதோடு, இது இலங்கைக்கான அவரது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமென்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!