மைத்திரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்க பல சதித்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

இந்த சதித்திட்டங்களை எதிர்கொள்ள அனைவரும் கட்சி வேறுபாடின்றி, இன வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது,என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருமதி பண்டாரநாயக்கவின் 21 வது நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

பண்டாரநாயக்க பாரம்பரியத்திற்கு ஏற்ப ஒரு புகழ்பெற்ற நாட்டை உருவாக்க நாம் கிராமம் கிராமமாக வீடு வீடாக சென்று ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!