மின்சார கட்டணம் செலுத்தாதவர்களிற்கான முக்கிய அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது நுகர்வோருக்கு மின்கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலத்தை நீட்டிக்க முடியாது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று தெரிவித்தார்.

மின் கட்டணங்களை செலுத்தாதன் காரணமாக ஆழ்ந்த நிதி நெருக்கடியில் மின்சாரசபை சிக்கியுள்ளது. செலுத்த வேண்டிய மின்கட்டண நிலுவை தொகை கிட்டத்தட்ட ரூ.44 பில்லியன். இந்த மாதத்திற்கான கட்டணங்கள் இதில் இணைக்கப்படவில்லை.

கடந்த மாதம் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த மாதமும் மின்சாரம் துண்டிக்கப்படாது என்று உறுதியளித்தார்.

“தற்போது சுமார் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் அறவிடப்பட வேண்டும். எனினும் அதற்கு நாம் வட்டி அறவிடவில்லை. 12% இடைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை நாம் ஊக்கப்படுத்தியுள்ளோம். கட்டணம் செலுத்த கூடியவர்களும் செலுத்தவில்லை. அது தான் பிரச்சினை. முடிந்த அளவில் மின்சார கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.“ என்றார்.

Sharing is caring!