யாழ்ப்பாணத்தில் அசைவற்று கிடந்த பச்சிளம் குழந்தை; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளம் தம்பதியர் தமது குழந்தை அசைவின்றியிருப்பதாக கூறி, இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் , குழந்தை 5 மணித்தியாலங்களின் முன்னரே உயிரிழந்ததாக கூறியமை பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

. இந்நிலையில் உயிரிழந்த குழந்தையொன்றின் சடலம், சாவகச்சேர ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையின் இறப்புக்கான காரண வெளியாகாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

Sharing is caring!