இலங்கையில் சடுதியாக அதிகரித்தது இறைச்சியின் விலை!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதன்படி நேற்றய தினம் ஒரு கிலோ கோழி இறைச்சி 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

3 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கூறுகின்றனர்.

Sharing is caring!