பிறந்த குழந்தை கொரோனாவுக்கு பலி..!!

இலங்கையில் அண்மைய நாட்களாக வயது வித்தியாசமின்றி கொரோனா தொற்றி வருவதுடன் அதனால் உயிரிழப்புகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் பிறந்து 8 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றது.

கடந்த மே 27ஆம் திகதி உயிரிழந்த சிசுவின் பி.சி.ஆர் அறிக்கை நேற்று வெளியாகிய நிலையிலேயே அந்த சிசுவுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் நாட்டில் பதிவாகிய மிகக்குறைந்த வயதுள்ள குழந்தை மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!