நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம்..!!

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்சமயம் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொது மக்கள் தமது வசிப்பிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் என்பனவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Sharing is caring!