முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு சென்றவர் மாயம்!

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் கிராமத்தினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று நண்பகலாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் நந்திக்கடலில் தொழில் செய்யும் பகுதிக்கு சென்று தேடியும் காணாத நிலையில் அவரது குடும்பத்தினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!