கட்டுப்பாடற்ற வேகம்! மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, இளைஞன் பலி, யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்.

யாழ்.கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. மிகை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தில் கொடிகாமம் – கோயிலாமனை பகுதியை சேர்ந்த

24 வயதான நவர்ணன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Sharing is caring!