கொழும்பு ஆடைத்தொழிற்சாலையொன்றில் டெல்டா கொத்தணி..!!

கொழும்பு புறநகர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் டெல்டா கொத்தணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் டெல்டா தொற்றுடைய ஐவர் உட்பட 120 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகராகிய கஸ்பேவ பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Sharing is caring!