ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுப்போம்..வரலாற்றில் சிறந்த ஜனாதிபதி – கோட்டாபயவுக்கு புகழாரம்

ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை முக்கியஸ்தர் அஹமட் புர்ஹான் தெரிவித்தார்.

கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(20) மாலை நடாத்திய ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வரலாற்றில் என்றுமில்லாத சிறந்த ஒரு ஜனாதிபதியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் நாட்டிலேயே குழப்பவாதிகளாலும் ஆர்ப்பாட்டகாரர்களாலும் பல பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன. அந்த போராட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஜனாதிபதி உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்காக கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்.

அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கும் ஜனாதிபதியின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.

எதிர்கட்சிகள் போல வீணாக விமர்சனங்களை கூறாமல் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என்றார்.

Sharing is caring!