தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்பப்பெண்… பொலிஸார் தீவிர விசாரணை….

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை அனிதா(26) என்பவர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியானவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே திருமணமாகி பிறகு தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் யாரும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சம்பவ இடத்துக்கு மண்டூர் பிரதேச திடீர் மன்னரான விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவகுமார் சடலத்தை பார்வையிட்டதுடன் அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!