அகத்தியரை சந்திக்க முடியும்….ஆசி பெற முடியும்

அகத்தியரை காண வேண்டுமா! 45 விரதம் இருப்பது பற்றி.

அகத்தியர் என்பவர் 18 சித்தர்களுள் ஒருவர், இவரை காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும், இந்த பதிவை படிப்பதற்கு கூட நல்ல பூர்வ புண்ணியம் பெற்றிருக்க வேண்டும், இந்த கலியுகத்தில் குருவை தேடி கொண்டிருப்பவர்கள் மற்றும் அகத்திய மகரிஷியை காண நினைக்கிறவர்கள் கீழ் உள்ள மந்திரத்தை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே

என் குருவே வா வா வரம் அருள்க

அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த மந்திரத்தை தினமும் காலை 4 முதல் 6 வரையிலான காலத்தில் ஏதாவது 1 மணிநேரமும் இரவு 8 மணிக்கு மேல் 1 மணிநேரமும் கண்ணை மூடி ஜபிக்க (108 முறை ) வேண்டும், இதனை புதிகாக வாங்கப்பட்ட தியானத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வெள்ளை துண்டின் மேல் அமர்ந்து சொல்ல வேண்டும், 45 நாட்கள் கடுமையான அதாவது மது அசைவம் மற்றும் ஒரு மனதாக தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்க வேண்டும், இவ்வாறு செய்ய 45 ஆம் நாள் அகத்தியர் காட்சி அளிப்பார், இவர் தங்க நிற தாடியுடனும் 4 முதல் 5 அடியுடன் ஜடாமுடியுடன் காட்சி அளிப்பார்,

அகத்தியர் காட்சி கிடைக்கும் போது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற வேண்டும், இதனை செய்தாலே பிறவி பயனை அடைந்து விடலாம்.

Sharing is caring!