அடிக்கடி சிறுநீர் கழிப்பது இந்த ஆபத்தான நோயின் உச்சம்!

நமது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோய் சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவு முறையில் சில சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

நீரிழிவு நோயின் அறிகுறி
 • அதிகமான தாகம் மற்றும் பசி
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • மங்கலான பார்வை
 • எடை இழப்பு
 • அளவுக்கதிகமான களைப்பு
 • நோய் தொற்றுகள்
 • கை மற்றும் கால்களில் உணர்வுகள் குறைதல்
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சில பாட்டி வைத்தியம்
 1. 1 தேக்கரண்டி நாவல் விதை பவுடரை மிதமான சூடான நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
 2. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பவுடர் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தய பவுடர் ஒன்றாக கலந்து 1/2 கப் நீரில் நன்றாக கலக்க வேண்டும்.
 3. இந்த நீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சக்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.
 4. இரவு முழுவதும் வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
 5. ஒரு நாளைக்கு 2 முறை நெல்லிக்காய் சாறை பருக வேண்டும் (அ) ஒரு நாளைக்கு 2 நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை, கரும்புச் சாறு, நெய், எண்ணெய், கேக், வெல்லம், புளிப்பு பானங்கள், ஆல்கஹால், கார்போஹைட்ரெட் நிறைந்த உணவு, தயிர், குப்பை உணவுகள், வெண்ணெய், குளிர் பானங்கள், பிஸ்கட் போன்றவை.

இவை அனைத்தையும் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள். நிறைய நார்சத்து நிறைந்த உணவுகள் எப்போதும் உங்களை கட்டுக்குள் வைத்திருக்கும்

Sharing is caring!