அடிக்கடி பிளாக் டீ குடிப்பவரா நீங்கள் !!

உடல் எடையை குறைக்க பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை முற்றிலுமாக சாப்பிடக்கூடாது என்று நம்பி ப்ளாக் டீ அதிகமாக சாப்பிடுவார்கள்.ஒரு நாளைக்கு மூன்று கப்பிற்கு மேல் அதிகமாக ப்ளாக் டீ குடிப்பவர்களுக்கு என்னென்ன உபாதைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.கர்ப்பமாக இருக்கும் பெண்கள், ப்ளாக் டீ அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

சில நேரங்களில், முதல் ட்ரைம்ஸ்டராக இருந்தால் கருக்கலையக்கூட வாய்ப்புண்டு. அல்லது குறை மாதத்தில் பிரசவம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் மட்டுமல்ல தாய்பால் கொடுக்கக்கூடிய பெண்களும் இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.உங்களிடமிருந்து தாய்ப்பால் அருந்துகிற குழந்தைக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் இதனால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

ப்ளாக் டீயில் அதிகப்படியான கேஃபைன் இருக்கிறது. இதனை அதிகமாக சேர்த்துக் கொண்டால் சோர்வு உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது.இதனால் நா வறண்டு போவது, தூக்கம் குறைபாடு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.ப்ளாக் டீ தொடர்ந்து ஒரு நாளைக்கு ஐந்து கப்பிற்கு மேல் குடிப்பதினால் இதயத்துடிப்பில் மாற்றங்கள் உண்டாகும். இது அப்படியே சங்கிலித் தொடர் போல பல நோய்களை உருவாக்கிடும்.

ப்ளாக் டீ நம் உடலில் இருக்கூடிய ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தக்கூடியது. ரத்த அழுத்தம் திடீரென்று அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து ப்ளாக் டீ குடிக்க வேண்டாம்.ப்ளாக் டீயில் அதிகப்படியாக டேனின் இருக்கிறது. இது அதிகமாக நம் உடலில் இருந்தால் நம் உடலில் சேரும் கழிவுகளை அப்படியே தங்கிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.

Sharing is caring!