அட்சய திருதியை இன்று……..என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும்

நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை” எனப் போற்றப்படுகிறது.

‘அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும்.

இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை (07-05-2019) இன்று வருகிறது.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

அட்சய திருதியை நாளன்று என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும் :

அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.

அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்கு சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்

ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்;.

தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும்;. தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

 

ஆனால், அக்ஷய திருதியை அன்று என்னென்ன தானம் செய்தால், என்னென்ன புண்ணியம் கிடைக்கும் என உங்களுக்கு தெரியுமா?
 • அன்னதானம் – செல்வங்களையும் அள்ளி தரும்.
 • ஏழைகளுக்கு உதவி – மறுபிறவியில் ராஜயோகம் கிடைக்கும்.
 • புத்தாடைகள் – நோய்கள் தீரும்.
 • கற்பூரம் – சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.
 • தாமரை, மல்லிகை – அரச குடும்பத்தில் பிறப்பு கிடைக்கும்.
 • தாழம்பூ – மகாவிஷ்ணு அருள் கிடைக்கும்.
 • பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் – உயர்பதவி கிடைக்கும்.
 • மோர், பானகம் – முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
 • தன்னால் இயன்றவற்றவை – நரகத்திற்கு செல்லாமல் தப்பிக்கலாம்.
 • தானியங்கள் – அகால மரணம் ஏற்படாது.
 • முன்னோர்க்கு தற்பணம் – வறுமை நீங்கும்

Sharing is caring!