அநீதியும் அதர்மமும் விலக திதி நித்யா தேவி துதி

நினைப்பவை அனைத்தும் நினைத்தப்படி நடக்க வேண்டும் என்ற வேண்டுதல் இல்லாத பக்தர்கள் யாருமே இல்லை. எல்லோருக்கும் வரமளிக்கும் தேவதைகளும் பக்தர்கள் கேட்பதை கொடுக்கவே விரும்புகிறார்கள். ஆனால் அனைத்தும் நியாயமான வேண்டுதல்களாக இருக்க வேண்டும் என்றே அவர் களும் விரும்புகிறார்கள்.

கலியுகத்தில் தர்ம வழியில் செல்பவனை  அதர்ம வழியில் செல்பவர்களும், அநீதி இழைப்பவர்களும் துன்புறுத்தி இன்பம் காண்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நல்லதுக்கு காலமில்லை கலி முத்தி விட் டது என்று எதிரிகளைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்களை எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் காத்தருளுகிறாள் சிவதுதி… தேவி மஹாத்மியத்தில் சும்ப- நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் சிவனை தூதுஅனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. அதனால் சிவனை தூதுவனாக கொண்டவள்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து  கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  வளர்பிறை சப்தமி அல்லது தேய் பிறை நவமி திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி சிவதுதியை சுக்லபக்ஷ சப்தமி, கிருஷ்ணபக்ஷ நவமி அன்று  இவளை வழிபடுங்கள். அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி சிவதுதியை வணங்கினால் அனைத்து அநீதிகளிலிருந்தும் அதர்மத்திலிருந்தும் பக்தர்களை காத்தருளுவாள்.

சிவதுதி:
திதி நித்யா தேவிகளின் ஏழாம் இடத்தை அலங்கரிப்பவள். கோடைக்கால சூரியனில் வெளிப்படும் ஒளியைப் போன்று இவளது திருமுகம் பிரகாசமாய் மின்னுகிறது. மூன்று கண்களைக் கொண்டிருக்கிறாள். கேடயம், அரிவாள், பாசம், கோப்பை, கதை, அங்குசம், கட்கம், தாமரை மலர்கள் என எட்டுத் திருக்கரங்களிலும்  இவை ஒவ்வொன்றையும் ஏந்தி அருள்புரிகிறாள்.
மூலமந்திரம்:
ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

Sharing is caring!