அனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா?

ராமாயணத்தில் ‘சுந்தரகாண்டம்’  மிகவும் முக்கியமான பகுதி மட்டுமின்றி, மகத்தான பகுதி. இதைப் படிக்கப் படிக்க, நம் வாழ்வில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நன்மைகளும் உயரங்களும் கிடைக்கும் என்பது உறுதி.

சுந்தர காண்டம் முழுவதையும் ஒரே நாளில் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது  என, உமாசம்ஹிதையில், சிவபெருமான் தெரிவித்துள்ளார்.

சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு அத்தியாயமும், மந்திர சக்தி  உள்ளவை. சுந்தர காண்டத்தை, தினமும், பக்தியுடன் படித்து வந்தால், வாழ்க்கையில்  துக்கங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் மாயமாகிவிடும்.

சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும் என்பது உறுதி.
சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், மன வலிமை உண்டாகும். மனோதிடம் பெருகும். மனத்தெளிவு பிறக்கும்.

சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். ஆஞ்சநேயருக்கு வடைகளும் வெண்ணெய்யும் நிவேதனம்செய்தும், நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம்.

ஸ்ரீராமருடன் மீண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்தது சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது சிறப்பு.

Sharing is caring!