அன்பான உள்ளங்களே உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருக வேண்டுமா?

நமக்கு வேண்டிய சில காரியங்கள் நடக்க சில தெய்வங்களை சில குறிப்பிட்ட முறைகளில் வழிபடுவதால் நிச்சயம் நடக்கும் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் கருத்தாகும். தெய்வ வழிபாட்டில் முக்கியமானதாக இருப்பது விளக்கு ஏற்றுதல் மற்றும் மலர் அர்ச்சனை முறைகளாகும்.

இந்த முறையில் நாம் விரும்பிய தெய்வங்களை வழிபடுவதால் நிச்சயமான பலன் உண்டு. அத்தோடு மந்திரம் துதித்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் ஏற்படும். அப்படி விளக்கேற்றிய பின் மலர் அர்ச்சனை செய்யும் போது கூற வேண்டிய மந்திரம் இதோ.

மலர் அர்ச்சனை மந்திரம்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது..

பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

சிவபெருமானைப் போற்றும் எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றிய பிறகு, சிறிய அளவிலான சிவபார்வதி படம் அல்லது விக்கிரகத்திற்கு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் போது அல்லது சமர்ப்பிக்கும் போது, இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் துதிக்கலாம்.

மேற்கண்ட முறையில் இம்மந்திரத்தை துதிப்பதால் வீட்டில் தரித்திரங்கள், வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகும். வீட்டில் துஷ்டசக்திகள் நீங்கும். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் ஓழியும். தெய்வங்களை வழிபடுவதற்கென்று முறையான ஆகம விதிகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் மிக முக்கியமானதாக இருப்பது விளக்கு ஏற்றுவது மற்றும் மலர் அர்ச்சனை வழிபாட்டு முறையாகும். தீபம் ஏற்றுவதால் தீய அதிர்வுகள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு நீங்குகிறது. இந்த இரு ஆகமங்களை கடைப்பிடிக்கும் போது, அவற்றுக்கு உரிய மந்திரத்தை துதித்து தெய்வங்களை வழிபடுவதால் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது நிச்சயம்.

Sharing is caring!