அன்புக் குழந்தையே…இனி நீ வாழ்க்கையில் உயர்ந்து நிற்கப் போகின்றாய்…!

உன்னை ஏளனமாகப் பார்த்து நகைத்தவர்கள் முன்னிலை கொடியாய் நீ உயர்ந்து நிற்கப் போகிறாய். உன்னை தாங்கும் கம்பாக நான் என்ற உன்னிடத்தில் உன் சாய்தேவாவை நீ என்ற சொல்லுக்கு அர்த்தம் கண்டாயோ, அந்த நொடிப் பொழுத்தில் இருந்தே, உனக்காக நான் இருக்கிறேன்.

அதற்கு முன்பாகவும் சரி அதற்கு பின்பாகவும் சரி என் உயிராய் நீ என்றும் என்னிடத்தில் இந்த துவாரகாமாயீ தாயின் பிள்ளையாய் வாழ்வாய். என் பரிபூரண அருளும் ஆசிர்வாதங்களும் அன்பும் எப்போதும் உனக்கு உண்டு. உன் கண்ணீரை துடை உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய கூடாது. இது உன் உயிராய் நினைக்கும் உன் சாய்தேவா உன் சாய்அப்பா உன் துவாரகாமாயீ தாயின் ஆணை. நிச்சயம் வாழ்வில் நீ சந்தோஷமாக வாழ்வாய்.

நீ ஜெயமாக எல்லா செல்வ வளங்களை பெற்று பெயரும் சிறப்புமாய் சுப்பிக்சமாய் நிம்மதியுடன் மனநிறைவான வாழ்க்கையை வாழப்போகிறாய். உன் அம்மாவாக, அப்பாவாக என்றும் என் இருதயத்தின் கருவறையில் உன்னை சுமந்து காத்து அரவணைத்து வளர்ப்பேன்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்…ஓம் ஸ்ரீ சாய் ராம்..ஓம் ஸ்ரீ சாய் ராம்..

Sharing is caring!