அபிஷேகம் முடிந்தவுடன் வியர்க்கும் பெருமாள்; திருப்பதியில் புதைந்து கிடைக்கும் ரகசியங்கள்!

புரட்டாசி மாதம் என்றாலே, திருப்பதி ஏழுமலையான் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த திருப்பதி கோவில், அதிக அதிசயங்கள் நிறைந்த ஸ்தலம். அதை வாயால் சொல்லவும் முடியாது. எழுதவும் முடியாது. சில அதிசயங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

திருப்பதி ஆலயத்திலிருந்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

பச்சைக்கற்பூரத்தை, சாதாரணக்கருங்கல்லில் தடவினால், அது  வெடித்துவிடும். ஆனால், சிலாதாரண பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள்  வெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும், பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும், 110 டிகிரி பாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு, ஏழுமலையானுக்கு  அபிஷேகம் நடக்கிறது.  ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை, பட்டர்கள்  ஒற்றி எடுக்கிறார்கள்.

வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் கொதிக்கின்றன. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்கப்படுகிறது.  இதில் தயிர்சாதம் தவிர, வேறு எந்த நிவேதனமும்,  கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வெங்கடாஜலபதிக்கு படைத்த எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும், ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால், அது மிகப்பெரிய பாக்கியம்.

ஏழுமலையான் உடை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில், 12500 ரூபாய் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு, மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Sharing is caring!