அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…

ஆடிமாதம், அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வார்க்க வேண்டும் என்று முன்னோர்கள் பழக்கியதெல்லாம் ஆன்மிகத்தை தாண்டிய அறிவியலும் கூட..

ஆடி மாதம் தொடக்கத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கிறது. அப்போது வெளிப்படும் சூரியக் கதிர்கள் விவசாயத்துக்கு நன்மை  தரும். அதனால் தான் ஆடி பட்டம் தேடி விதை என்றார்கள். சூரியனிடமிருந்து வெளிப்படும் சூட்சும சக்திகள் பிராணவாயுவை அதிகரிக்கும். சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் இக்காலத்தில் சந்திரன் சூரியனைக் குளிர்விக்கிறது. இதனால் பகல் பொழுது குறைந்தும் இரவு நீண்டும் இருக்கும்.

சந்திரனின் குளிர்ச்சியால் பூமியும் குளிர்ந்து காற்றும், மழையும், ஈரப்பசையும் கொண்டு இருக்கும். இக்காலங்களில் கிருமிகளின் தாக்கம் அதிகமாகி எண்ணிக்கையைப் பெருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் தொற்றுக்களால் அவதியுறுவார்கள். குறிப்பாக அம்மை நோய் தாக்கக்கூடிய காலம் இது.

சூரியனின் கதிர் வீச்சால் உடலில் சூடு அதிகரித்து வைரஸ் கிருமிகளால் அம்மை நோய் அதிகரிக்கும். காற்றில் இருக்கும் ஈரப்பதம் இந்தக் கிருமியை வேகமாக பரப்பி அம்மை நோயை உண்டாக்குகிறது. வருமுன் காப்போம் என்று ஆரோக்யம் குறையாமல் வாழ்ந்த முன்னோர்கள் முன் எச்சரிக்கையாக அம்மையை  வரவிடாமல் தடுத்தார்கள்.

அம்மை நோயை அண்ட விடாமல் தடுக்கும் உணவு பொருளில் சிறந்தது கூழ். அதனால் தான் ஆடிக்கு அம்மனுக்கு கூழ்படைக்கும் சடங்கை உருவாக்கினார்கள். கேழ்வரகு கூழில் ஈஸ்ட் என்னும் நுண்ணுயிர் அதிகமாக இருக்கிறது. அதனோடு சேர்த்து படைக்கப்படும் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவையும் அதிகமாக காணப்படுகிறது.

Sharing is caring!