அம்மனை குளிர்விக்கும் எலுமிச்சை


அம்மனை ஆராதிப்பதில் பெண்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மனதில் இருக்கும் கவலைகளையும்,  இன்பங்களையும் பெற்ற தாயைப் போன்று பகிர்ந்து கொள்வதைப் போல் அம்மனிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். தாய் தன் குழந் தைகளைக் காப்பது போல அம்மன் தங்கள் குலத்தையே காப்பாள் என்பதால்   குலதெய்வத்துக்கான வேண்டுதலைத் தொடர்ந்து அவர்களது மனம் அம்மனை நினைத்தே பயணிக்கிறது. வாழ்வில் எல்லா தீமைகளையும் போக்குவதோடு அனைத்து பயங்களையும் போக்கும் தாயாக அம்மன் வழிபாடு அமைகிறது.

நல்ல கணவன் கிடைக்கவும்,  திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறை அடையவும், மாங்கல்யம் நீடிக்கவும், குடும்பத்திலிருக்கும் பிரச்னைகள் நீங்கவும் என அனைத்துக்குமே அம்மனைத்தான் சரணடைகிறார்கள். அதுமட்டுமல்ல பதி னாறு செல்வங்களையும் வழங்கும் அம்மன் நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்களை விரைந்து நடத்தி தருவாள் என்றும்  பக்தர்கள் நம்புகிறார்கள். வேண்டுதலை  நிறைவேற்றிய அம்மன் எலுமிச்சை மாலையிலோ, எலுமிச்சை தீபத்திலோ குளிர்ந்துவிடுகிறாள் என்பதாலேயே எலுமிச்சை அம்மனுக்கு உகந் ததாகிற்று. அதனால் தான் அம்மன்  சன்னிதிகளில் எலுமிச்சை தீபங்களை அனு தினமும் ஏற்றுகிறார்கள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில்  எலு மிச்சை தீபத்தை ஏற்றி தங்கள் குறையைப் போக்க வழிபடுகிறார்கள். எலுமிச்சை ஜீவகனி மட்டுமல்ல.. வெற்றிக்கனியும் கூட…  நமது முன்னோர்களுக்கு வேண் டுதலை கோரிக்கையாக வைக்கும் போதே எலுமிச்சம்பழத்தை மாலையாக்கி போடும் வழக்கம் இருந்தது. அரசர்கள்  எதிரி நாட்டின் மீது படையெடுக்கும் போது ஊர்காவல் தெய்வம், எல்லையிலிருக்கு தெய்வத்துக்கு எலுமிச்சை மாலை அணிவித்து  வழிபட்டபிறகே  போரிட செல்வார்கள்.  போரில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் எலுமிச்சை மாலை சாற்றி  பூஜை செய்து வழிபடுவார்கள்.

பில்லி, சூனியம், ஏவல்,  துர்சக்திகள் அண்டியவர்களை காளி கோயில்களுக்கு அழைத்து சென்று எலுமிச்சை மாலை சாற்றீனால் பிடித்திருக்கும் துஷ்ட சக்தி களும், சூனியங்களும் மாயமாய் மறைந்து போகும்.திருவக்கரை வக்ரகாளியம் மன், பட்டீஸ்வர துர்க்கையம்மன் , மாகாளியம்மன் கோயில்களில்  பக்தர்கள்  முக்கிய வழிபாடாக இதைக் கொண்டுள்ளனர்.

துர்க்கை, காளி, மாரியம்மன், நடராஜர், பைரவர், ஐயனார் போன்ற தெய் வங்களுக்கு எலுமிச்சை மாலையை 18,27,45,54,108, 1008 என்னும் எண்ணிக்கையில் கோர்த்து மாலையாக்குகிறார்கள். எலுமிச்சை மாலை கோர்க்கும் போது ஒரே அளவிலான பழங்களில்  கோர்ப்பதுமுக்கியம்.

இனி அம்மனை காண எப்போது சென்றாலும் எலுமிச்சையை ஏந்தி செல் லுங்கள். மனம் குளிர்வாள். உங்களையும் குளிர்விப்பாள்.

Sharing is caring!