அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

நம்முடைய உணவுகளில் மிகவும் முக்கியமானது ஒன்று அரிசி. தினமும் சமைக்கும் போது அரிசி கழுவிய நீரை பயன்படுத்தாமல் வீணாக்கிவிடுகிறார்கள். ஆனால் அரிசி கழுவிய நீரில் ஏராளமான விட்டமின்ஸ், மினரல்ஸ், அமினோ ஆசிட் நிறைந்திருக்கிறது.

அப்படி அரிசி கழுவிய நீரில் எனென்ன நற்பலன்கள் இருக்கிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

பேஷியல்

இதனை தினமும் பேஷியல் க்ளன்சராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை துடைத்திடுங்கள். சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும். கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் விணை புரியும்.

சருமம்

அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை டைட் செய்திடும்.

வயதான தோற்றம்

வெயிலில் அதிகப்படியாக இருப்பவர்களுக்கு ஆக்னி ஏற்படும் அத்துடன் சருமம் வறண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவலாம்.

கூந்தல் பிரச்சினைகளுக்கு

சைனாவில் உள்ள யாவோ என்ற ஊரின் சிறப்பே அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்கும் நீளமான முடி இருக்கும். இச்சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அவர்களிடம் காரணத்தை கேட்ட போது, அவர்கள் சொன்னது, நாங்கள் தினமும் அரிசி கழுவிய நீரில் தலைக்குளிக்கிறோம் என்பது தான்.

ஷாம்பு, சீயக்காய் என்று எதைத்தேய்த்து தலைக்கு குளித்தாலும் கடைசியாக அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றிக்கொண்டால் கூட போதும்.

குழந்தைகளுக்கு

அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

Sharing is caring!