அலுமினியம் வேண்டாம்… மண்சட்டி ஓகே..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் பழமொழிக்கேற்ப பாத்திரங்களும் மாறி இருக்கின்றன. அப்பத்தா வீட்டிலும் அம்மாச்சி வீட்டிலும்  சாணம் பூசிய அறையில் ஒய்யார அடுக்காய் ஒன்றின் மீது ஒன்றாய் அமர்ந்திருக்கும் அளவுக் கேற்ற பானைகள் தான் சமையலுக்கும், தானியங்களைப் பாதுகாத்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டது…

உப்பு, ஊறுகாய் வகைகள் பீங்கானிலும், நவதானியங்கள் , புளி, பருப்பு வகைகள்  பெரிய பெரிய பானைகளிலும், எண்ணெய் வகைகள் டின்களிலும்  வருட காலத் துக்குப் பதப்படுத்தி வைக்கப்பட்டன..  மண்சட்டி, பித்தளை, செம்பு,  வெண்கலப் பாத்திரங்களை சமையலுக்கு உபயோகப்படுத்தினார்கள்.  சத்தான  பொருள் களை சத்து குறையாமல் கொடுக்கும் பாத்திரங்களில் சமைத்தால் தான் ஆரோக்யம் என்பது குறையாமல் காக்கப்படும்.

எண்ணெய் உடலுக்கு கெடுதி என்பதற்காக எண்ணெயே இல்லாமல் சமைக்க பயன்படும் நான்ஸ்டிக்  பாத்திரங்கள் நன்மையை மட்டுமே அளிக்கிறது என்று சொல்லிவிட முடியாது. நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும் தொற்றை உடலுக்குள் தீவிரப்படுத்தவும் வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறது ஆய்வு ஒன்று.  குக்கர், எலக்ட்ரிக் குக்கர், அவன் எல்லாமே காலத்தின் ஓட்டத்தில் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். ஆனால்  காற்று ஒளிபடாமல் மூடிவைத்து சமைக்கப்படும் உணவுகள் உடல் உறுப்புகளுக்கு ஒவ்வாமையை மட்டுமே உண்டாக்கும் என்று சொல்லிவிடலாம்.

என்ன பாத்திரத்துக்கு மாறுவது? எவையெல்லாம் நல்லதைக் கொடுக்கும் என் றால் மீண்டும்   பழைய காலம் போல் மண்பாண்டமே சிறந்தது என்கிறார்கள்  உணவியல் நிபுணர்கள். மண்சட்டிகள், மண்பானைகளில் உணவுகள் சமைக்கப்ப டும்போது அதில் உள்ள நுண் துளைகள் மூலமாக நீராவியும் காற்றும் ஊடுரு வுகிறது. இது உணவை சீரான பதத்தில் சமைப்பதோடு சத்துக்களைக் குறைக் காமல்  சுவையாகவும் ஆக்குகிறது. அமிலப் பாதிப்புகள் அறவே இல்லாத மண் சட்டி பாத்திரங்கள்  நன்மையை மட்டுமே தரும்.  மண் பானையில் சமைக்கப் படும் உணவுகள்  மாற்றாமல் அதிலேயே வைத்திருக்கலாம். இதைப் பராமரிப் பது  மட்டுமே சற்று சிரமமானதாக இருக்கும்.

மண்பாத்திரங்களுக்கு அடுத்து வந்த எவர்சில்வர் பாத்திரங்களும் உணவு சமைக்க சிறந்தவையே.. இவற்றிலும் அமிலவினைபுரியும்  தன்மை இல்லாததால் சமைத்த உணவை மாற்றாமல் இதிலேயே வைக்கலாம். தரமான  எவர்சில்வர் பாத்திரங்கள் மண் பாத்திரத்துக்கு மாற்றாக பயன்படுத்தலாம்..  வாணல்  பொறுத்தவரை பெரும்பாலும் இரும்பை பயன்படுத்துவோம். சமைக்க ஏற்ற வையாக இருந்தாலும் சமைத்து முடித்ததும் உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டும்..

ஆனால் விலை மலிவு பராமரிப்பு குறைவு என்று அலுமினிய பாத்திரங்கள் சமையலறை முழுவதும் இன்று நிறைந்து கிடக்கிறது. அலுமினிய பாத்திரங் களில் தொடர்ந்து சமைத்தால் அதில் இருக்கும் மெட்டல் உடலில் கலக்க வாய்ப் புள்ளது. அன்றாடம் ஒரு துளி மெட்டல் என்றால்  அனுதினமும் உடலில் கலக் கும் மெட்டல்  ஆபத்தை மட்டுமே கொடுக்கும் என்று எச்சரிக்கிறது உலக சுகா தார நிறுவனம்.. அலுமினியப் பாத்திரங்களை அகற்றி மண்சட்டிகளுக்கு உயிர் கொடுங்கள். அது உங்கள் உடலின் ஆரோக்யத்துக்கு உயிர் கொடுக்கும்.

Sharing is caring!