அலைபாயும் மனத்தை அடக்க முடியுமா?

வாழ்க்கையில்  இன்ப துன்பங்களை சரிசமமாக பாவிக்க  வேண்டும் என்ப தைத்தான் புராணக்கதைகளும், இதிகாசங்களும், வேதங்களும், முனிவர் களும், ரிஷிகளும் ஏன்  இறைவனும்  கூட வலியுறுத்துவது இதுதான்..  அலைபாயும் மனத்தை மனிதர்களால் அடக்க முடியுமா என்ன? இதைப்பற்றி  விளக்கும் கதை ஒன்றை பார்க்கலாம்…

முனிவர் ஒருவர் குருகுல கல்வியை நடத்தி வந்தார்.  புகழ்பெற்ற இக்குரு குலத்தில்  கற்க உலகம் முழுக்க இருந்து மாணாக்கர்கள் படையெடுத்து வந்தார் கள். குருகுலத்தில் எல்லோரும் சமமே.. இங்கு ஏழை எளியவர்கள் என்ற பேத மெல்லாம் கிடையாது. குருகுலத்தோடு பொருந்திகொள்வதில் சில இளவரசர்கள் தடுமாறினார்கள்.

மதனபுரி நாட்டைச் சேர்ந்த வித்யாதரன் என்னும் பெயருடைய இளவரசன் பொறுமைசாலி… அன்பானவன்.. அமைதியானவன்.. குருவின் கண் அசைவில் அவருடைய எண்ணத்தை நிறைவேற்றும் அளவு சிந்திக்க தெரிந்தவனாகவும் இருந்தான்…

ஒருமுறை குரு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்..   மனிதப்பிறவி என்பது மகத்தான பிறவி.. இப்பிறவியில் எந்த நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும் என்றார்… ”வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து வரும்.. ஆனால் மனதை  அலைபாய விடாமல் எப்போதும் நிதானமாக இருக்க வேண்டும்” என்றார்…   போரிடும் போது  நாட்டை இழக்க நேர்ந்தாலும்… ஏன்  எதுவுமே இல்லாத நிராயுத பாணியாக இருந்தாலும்.. உலகின் செல்வம் அனைத்தையும் பெற்றிருந்தாலும் எப்போதும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார். எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.. எப்படி முடியும் குருவே? இது மகான்களுக்கே சாத்தியம் என்றார்கள் மாணாக் கர்கள்.

”மனம்  உங்கள் வசம் இருந்தால் எல்லாம் சாத்தியமே” என்றார் குரு.. குருகுல கல்வி முடிந்து எல்லோரும் அவர்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள்.. இளவரசன் வித்யாதரன் செல்லும்போது  மதனபுரி நாடு சிதைந்திருந்தது..  எதிரி நாட்டு அரசனின் வேலை என்ற மக்கள்  செல்வம் முழுவதையு ம் அவன் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதால்  நாடு வளமிழந்துவிட்டதாக தெரிவித்தார் கள். ”ஓ.. அப்படியா” என்று சென்று விட்டான்.

தந்தையின் கட்டளைப்படி எதிரி நாட்டின் மீது பரிவாரங்கள் சூழ  படையெடுத்துச்சென்றான்.  வளம் இழந்ததால் கோபத்தில் இருந்த மக்கள் அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள். பெரும் வெற்றி பெற்று  இழந்த செல் வத்தை மீட்டு நாடு திரும்பினான். அரண்மனைக்குத் திரும்பிய வித்யாதரனை எதிர்கொண்ட அரசர் ”என்ன மகனே உன் முகம் எவ்வித சந்தோஷத்தையும், துக்கத்தையும் காண்பிக்கவில்லையே” என்றார்…

”குருவின் அறிவுரையில் இதுவும் ஒன்று.. இவையெல்லாம் நிரந்தரமில்லை.. வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை  அமைதியான முறையில் எதிர்கொள்ள வேண் டும்” என்று அவர் கூறியதைக் கடைப்பிடித்தேன் அவ்வளவுதான் என்று சென்று விட்டான்..

மகானிடம்  கல்வி பயிலும் குழந்தைகளும் மிகச்சிறந்த உதாரணபுருஷர்களாய் மாறிய  மனிதப்பிறவிகளும் உண்டு. வாழ்வில் துன்பத்தைக் கண்டு மலைக் காதீர்கள். அமைதியாக கடந்து செல்ல பழகிக்கொள்ளுங்கள்.

Sharing is caring!