அல்சரை விரைவாக குணப்படுத்த உகந்த சிவப்பு அரிசி

வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என அழைக்கப்படுகின்றது.அல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும்.

அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் அதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் இதனை மருந்துகளை விட இயற்கை உணவுகள் மூலம் கூட சரி செய்யலாம். அந்தவகையில் அல்சர் இருப்பவர்கள் சிவப்பு அரிசியில் தயாரிக்கப்படும் பாலக்கீரை காய்கறி சூப்பை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசி – அரை கப்,உளுந்து – கால் கப்,வெங்காயம், தக்காளி – தலா 1முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி – தலா ஒரு கப்,புதினா இலைகள் – சிறிதளவு,உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை

தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை போல் உடைத்து கொள்ளவும்.

இந்த ரவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.ஆறியதும் நன்கு மிளகுத்தூள் கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப் ரெடி.

Sharing is caring!