அல்சர் வயிற்று வலியா? விரைவில் குணமாக்கும் உணவுகள் இதோ

இரைப்பை சுவற்றில் ஏற்படும் காயங்களினால் உண்டாவது தான் அல்சர். இது சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியல் தொற்றுக்கள் மூலமும் ஏற்படுகிறது.

எனவே வயிற்று அல்சர் இருக்கும் போது மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக, குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொண்டாலே போதும். விரைவில் அல்சரை குணமாக்கிவிடலாம்.
காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் சல்போராஃபேன் என்னும் பைலோரி பாக்டீரியாவை எதிர்க்கும் பொருள் உள்ளது. இவை செரிமான பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து அல்சர் வராமல் தடுக்கிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் எஸ் மெத்தில் மெத்தியோனைன் என்னும் விட்டமின் மற்றும் அமினோ அமிலமான க்ளுட்டமைன், அல்சரை சரிசெய்ய உதவுகிறது.

இந்த பொருள் இரைப்பையில் உள்ள காயங்களை சரிசெய்வதோடு, வயிற்று தசைகளை வலிமையாக்கும். எனவே அதற்கு முட்டைக்கோஸை பச்சையாக அல்லது வேக வைத்து சாப்பிடலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பைலோரி ஆகியவை பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, வயிற்று அல்சர் இருந்தாலும், அதை குணப்படுத்துவதுடன், அல்சர் வராமலும் தடுக்க உதவுகிறது.

எனவே அதற்கு தினமும் ஆப்பிள் பழத்தில் ஒன்று சாப்பிட்டு வர வேண்டும்.

ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி

ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களை தினமும் காலையில் சாப்பிட்டால் அல்லது ஜூஸாக குடித்தால் அது வயிற்று அல்சர் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுவிக்க உதவுகிறது.

குடைமிளகாய்

குடைமிளகாயில் உள்ள பெப்டிப், அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவுகிறது. அதற்கு குடைமிளகாயை லேசாக வதக்கி, அன்றாட சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே அல்சரில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.

கேரட்

கேரட்டில் உள்ள விட்டமின் A, வயிற்று அல்சர், அஜீரண பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுபட உதவுவதுகிறது. அதற்கு கேரட்டை பச்சையாக, ஜூஸ் செய்து அல்லது சூப் வடிவில் தினமும் உட்கொள்ள வேண்டும்.

பூண்டு

சிறிய பூண்டில் வயிற்று அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாவான பைலோரி உள்ளது. இது வயிற்று அல்சரில் இருந்து விடுபட உதவுகிறது. அதற்கு அல்சர் இருப்பவர்கள் தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட வேண்டும்.

Sharing is caring!