அளவுக்கு அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

முந்திரி சுவையானது மட்டும் அல்ல ஆரோக்கியமானதும் கூட. என்னதான் நன்மைகள் இருந்தாலும் ஒருவர் அளவுக்கு அதிகமாக முந்தி சாப்பிட்டால் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அது பற்றி முழுமையாக இன்று படித்து அறிந்து கொள்ளுஙகள்.

  • அன்றாடம் மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள் முந்திரியை அதிகம் சாப்பிட்டால் நீர்க் கோர்வை மற்றும் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • முந்திரியில் உள்ள மக்னீசியம் நீர்பெருக்கி மருந்துகள், தைராய்டு மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளில் இடையூறை ஏற்படுத்தக்கூடியவை.
  • முந்திரி ஆரோக்கியமான ஒன்றாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும். ஒரு அவுன்ஸ் முந்திரியில் 163 கலோரிகள் மற்றும் போதுமான நல்ல அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது.
  • நல்ல கொழுப்புக்களைக் கூட ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும்.
  • ஒருவரது உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதனால் சர்க்கரை நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை, மெட்டபாலிச கோளாறு, இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
  • முந்திரி என்ன தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், போதுமான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டும்.
  • உப்புள்ள முந்திரியில் சோடியம் அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிகமான அளவில் முந்திரியை உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
  • பொதுவாக இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், உப்புள்ள சோடியத்தை மிதமான அளவில் சாப்பிடுவதே நல்லதல்ல. ஆகவே எப்போதும் முந்திரியை சாப்பிடுவதாக இருந்தால், உப்பில்லாத சோடியத்தை உண்ணுங்கள்.
  • ஏற்கனவே ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி உள்ளவர்கள், முந்திரியை அதிகமாக சாப்பிட்டால், நிலைமை மேலும் மோசமாகும். நட்ஸில் அமினோ அமிலங்களான பீனில்எத்திலமைன் மற்றும் டைராமைன் போன்றவை உள்ளது.
  • இவை பொதுவாக இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும். ஆனால் யார் இதற்கு சென்சிடிவ்வானவர்களோ, அதில் உள்ள அமினோ அமிலங்கள் காரணமாக கடுமையான தலைவலியை அனுபவிக்கக்கூடும்.
  • முந்திரியில் ஆக்ஸலேட் உப்புக்கள் உள்ளன. இவை கால்சியம் உறிஞ்சுவதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாவிட்டால், அது சிறுநீரகங்களில் கற்களாக உருவாகிவிடும்.

Sharing is caring!