அழகான குழந்தையைப் பெற குங்குமப்பூ சாப்பிடுங்கள்…

கர்ப்பம் தரித்த பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தைக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும் என்று காலங்காலமாக சாப்பிட்டு வரும் குங்குமப்பூவின் இத்தகைய நம்பிக்கையை இன்று வரை எந்த மருத்துவரும், மருத்துவ விஞ்ஞானிகளும் நிரூபிக்கவில்லை என்பதே உண்மை.

குங்குமப்பூ இது சாப்ரன் குரோக்கஸ் என்னும் செடியின் பூவிலுள்ள சூலக முடிகளையும் தண்டையும் தனியாக பிரிக்கப்பட்டு உலர்த்தப்பட்டு பொடியாக்கி தருபவை. துவர்ப்பு குணத்தைக் கொண்டவை. நல்ல மணத்தைக் கொண்டிருக்கும். விலை சற்று அதிகமே ஆனாலும் கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் பலவிதமான நன்மைகளை பேறுகாலத்தில் பெறலாம். குங்குமப்பூவில் தையமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்றவை அடங்கியிருக்கிறது.

உணவுபொருள்களில் மசாலாக்களின் ராஜா என்று  அழைக்கப்படும் குங்குமப்பூ உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. பிரியாணியில் குங்குமப்பூ சேர்த்தால் உணவின் சுவைக்கு நல்ல மணத்தைக் கொடுப்பதோடு உணவு செரிமானம் ஆகவும் துணைபுரிகிறது.
கர்ப்பிணி பெண்கள் 5 மாதங்களுக்குப் பிறகு இரவு நேரங்களில் பாலில் இரண்டு சிட்டிகை அளவில் குங்குமப்பூ கலந்து சாப்பிட வேண்டும். பாலில் உள்ள கால்சியம் சத்துக்களோடு இதில் உள்ள சக்திகளும் கலந்து தசைகளை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை தடையின்றி எடுத்துச்செல்ல உதவுவதோடு இரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

பிறக்கும் குழந்தையின் நிறம் பெற்றோர்களின் மரபை வைத்தே என்றாலும் குழந்தை அழகாக பிறக்க குங்குமப்பூ உதவுகிறது. பிரசவம் எளிதாகவும் சுகப் பிரசவம் எளிதாகவும் செய்ய குங்குமப்பூ துணைபுரிகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். கர்ப்பிணிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மன அமைதியை அதிகரிக்கவும் குங்குமப்பூ உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை சேர்த்து வந்தால் இரத்த சோகை பாதிப்பு இருக்காது. பிரசவ காலத்தை நெருங்கும் பெண்கள் சோம்பு நீரில் குங்குமப்பூ கலந்து குடித்தால் பிரசவம் எளிதாகும்.

இயல்பாகவே குங்குமப்பூ ஜலதோஷம், இருமல், புற்று நோய், பார்வைக் குறைபாடு போன்றவற்றை நீக்கும் தன்மை கொண்டது. பெண்கள் மாதவிடாயின் போது உண்டாகும் கடுமையான வயிற்றுவலியைக் குறைக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆண்களும் பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகம் பெறுவார்கள்.

குங்குமப்பூ உயர்ந்த மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது என்பதில் மாற்றமில்லை. ஆனால் நாள் ஒன்றுக்கு 10 கிராமுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு கேடுதான். குறிப்பாக கருத்தரித்த பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாகவும் வாய்ப்புண்டு என்பதால் அளவோடு பயன்படுத்துவது நல்லது.

Sharing is caring!