அழகிய தோற்றம் கொண்டவர்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்..!

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான குணநலன்களைப்  பற்றி பார்க்கலாம். பகவான் ஸ்ரீ விஷ்ணு அவதரித்தது புனர்பூச  நட்சத்திரத்தில்  தான் …புனர் என்றால் மீண்டும் என்ற பொருள்படும்..  வஸு என்றால் நல்லது என்று பொருள்படும் அதனால் இந்த நட்சத்திரத்தை புனர்வஸு என்றும் அழைக் கிறார்கள்..

புனர்பூசத்தை முதல் பாதம் கொண்டவர்களான உங்களின் அதிபதி செவ்வாய்… அதிக பாசமும் அதிக கோபமும் கொண்டிருப்பீர்கள்.. ஒழுக்கத்தோடு வாழ்வு என்பதை முக்கியமாக கடைப் பிடிக்கும் நீங்கள் உங்களால் செய்ய  இயன்ற வற்றை மட்டுமே சொல்வீர்கள் என்பதால் சமுதாயத்தில் உங்களுக்கான  மதிப் பும் உயர்வும் அதிகரிக்கும்..

புனர்பூசத்தை இரண்டாம் பாதம் கொண்டவர்களான  நீங்கள் சுக்கிரனை அம்ச மாக கொண்டவர் கள்… வாழ்க்கையில் சுகங்களை மட்டுமே விரும்புவீர்கள்… சுயநலம் கருதாமல் எல்லோருடைய நலனையும் விரும்புவீர்கள் என்பதால்  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள்..இறை நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள்..

புனர்பூசத்தை மூன்றாம்  பாதம் கொண்டவர்களான உங்களின் அதிபதி புதன் ஆவார். அதனாலேயே புத்திகூர்மை உடையவர்களாக இருப்பார்கள். தெய்வ பக்தி யைக் கொண்டிருப்பதால் சேவை செய்யும் குணங்களையும்  இயல்பிலேயே பெற்றிருப்பார்கள். உடலில் அவ்வப்போது  உடல் உபாதைகள் உண்டாகும்… மன இறுக்கத்தோடு  இருப்பார்கள்..

புனர்பூசத்தை நான்காம் பாதம் கொண்டவர்களான நீங்கள் சந்திரனை அதிபதி யாகக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதையே  விரும்பு வீர்கள்.. இயல்பிலேயே   அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். அதற் கேற்ற  அறிவையும் பெற்று வாழ்வீர்கள்…

புனர்பூச நட்சத்த்ரைத்தை உடைய உங்களது பொதுவான குணநலன்கள்  சிறப்புக் குரியதே… நல்லதை நினைத்து நல்லதை மட்டும்  செய்யும் நல்ல குணங்களைக் கொண்டவர்கள்.. பிறருக்கு உதவி புரிவதில் முதன்மையாக  வந்து தோள் கொடுக்கும் இரக்க குணம் கொண்டவர்கள் நீங்கள்.. சுயநலம் கருதாது பொதுநலம் மிக்க நட்சத்திரத்தைக் கொண்டவர்கள்  நீங்கள்… அழகிய தோற்றத்துடன்  அறிவு, நேர்மை, பொறுமை என்னும்  குணங்களைக் கொண்டு பக்குவத்தோடு வாழ்க்கையைக் கடப்பீர்கள்..

Sharing is caring!