அவநம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்ப்பானா?

நண்பர்கள் மூன்று பேர் இருந்தார்கள். மூவரும் கடுமையான உழைப்பாளிகள். இறைவனிடத்தில் அன்பு கொண்டவர்கள். ஆனால் ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான அன்பை இறைவனிடம் கொண்டிருந்தார்கள். முதலாமவனுக்கு எல்லாமே இறைவனே கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும்.அதே நேரம் இறைவன் மீது பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை.

இரண்டாமவனுக்கு நாம் செய்வதைச் செய்வோம். இறைவன் பார்த்துக்கொள்வான் என்னும் எண்ணம் உண்டு. மூன்றாமவனுக்கு  எப்போதும் யாரையும் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும். அது போலவே உழைப்புக்கேற்ற பலனை மட்டும் இறைவன் கொடுத்தாலே போதும் என் றும் நினைப்பான்.

ஒருமுறை மூவரும் காட்டுப்பகுதியைத் தாண்டி பக்கத்து ஊருக்கு சென்றார்கள். திரும்பி வரும்போது  காட்டுப்பகுதியில் மாட்டிக்கொண்டார்கள். நல்ல மழை வேறு. கும்மிருட்டில் மனதுக்குள் மெல்ல அச்சம் எட்டிப்பார்த்தது. இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணினான் முதலாம வன். மனம் முழுவதும் அபாயமணி அடித்துக்கொண்டே இருந்தது அவனுக்கு.

அடர்த்தியான காடு என்பதால் நிச்சயம் மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் அதனால் இருளில் செல்வது பாதுகாப்பானது அல்ல. இங்கிருப்பதும் பாதுகாப்பானது அல்ல என்றான் முதலாமவன். நீ சொல்வது சரிதான். அதேநேரம் மிருகங்கள் நடமாடாத இடத்தை தேடி தான் இரவு முழுவதும் கழிக்க வேண்டும் அதுதான் பாதுகாப்பும் கூட என்றான் இரண்டாமவன். இருவருமே சரியாகத் தான் சொல்கிறீர்கள். முதலில் இங்கிருந்து பாது காப்பாக செல்ல சிறு ஒளியாவது வேண்டும் என்றான்.

ஒருவழியாக மூவரும்  இருளில் காட்டைக் கடப்பதை விட காட்டில் தங்கியிருந்து  மறுநாள் போவது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத் தார்கள். அடர்ந்த மரத்தின் கிளைகளைப் பற்றியபடி இருந்தார்கள். நள்ளிரவு நேரம்  பசி ஒருபுறம். அச்சம் ஒருபுறம் என்று ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.தூரத்தில் சிறுத்தையின் உறுமல் கேட்டது.

நேரம் செல்ல செல்ல உறுமல் சத்தம் பக்கத்தில் கேட்க தொடங்கியது. இன்று மூவரும் சிறுத்தைக்கு பலியாக போகிறோம் என்றான் முதலாம வன். இறைவன் இருக்கும் போது நமக்கெதுவும் ஆகாது என்றான் இரண்டாமவன். இறைவனை வழிபட்டு அவரை கஷ்டப்படுத்தாமல் அருகில் இருக்கும் காட்டு கோயிலின் உள்ளே சென்று விடலாம் பாதுகாப்பாக இருக்கும் என்றான்.

Sharing is caring!