அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்

27 நட்சத்திரங்களில் 13 ஆவது இடத்தில் இருப்பது அஸ்தம் நட்சத்திரம்.  அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில்தங்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், வாழ்வில் துன்பமின்றி இருக்கவும்  நாகப்பட்டினமாவட்டம் கோபுரியில் உள்ள  கிருபா கூபாரேச்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

ஒருமுறை பார்வதிதேவி  தமது திருக்கரங்களால் சிவப்பெருமானின் கண்களை  விளையாட்டுக்கு மூடினாள். உலகமே இருளில் மூழ்கியது. தனது  தவறுக்கு  வருந்திய பார்வதி தேவி சிவனிடம் மன்னிப்பு கோரினாள். “உன்னுடையவிளையாட்டு தனத்தால்  உலகத்தை இருளாக்கினாய். இப்போது  என் கரங்களில் இருந்து ஹஸ்தாவர்ண ஜோதியில்நான் மறைவேன். நீ பசுவாக மாறி பூலோகத்தில் இருக்கும் என்னை வந்து சரணடைவாய்” என்றார். பார்வதியும்ஒப்புக்கொண்டு தனது தமையன் திருமாலுடன் சிவனுடைய  ஜோதியைத் தேடி  பூலோகம் முழுவதும் வளைய வந்தாள்.பூலோகம் முழுக்க தேடியும் சிவனின்  ஜோதி கிடைக்கவில்லை என்று கவலையடைந்தாள்  பார்வதி. பார்வதியின்வருத்தத்தை உணர்ந்து சிவன் அஸ்த நட்சத்திர நாளில் ஹஸ்தாவர்ண ஜோதியுடன் பார்வதி முன் தோன்றினார்.பார்வதிக்கு கிருபை செய்ததால் சிவன் கிருபா கூபாரேச்வரர் என்று அழைக்கப்பட்டார்.

மூலவர்  கிருபாகூபாரேச்வரர். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தாயார் அன்னபூரணி அம்மையார்.  பிரகாரத்தில்விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருள் புரிகின்றனர்.சித்தர்கள், மாமுனிகள், ரிஷிகள் அஸ்தம் நட்சத்திரம் நாளில் அரூப வடிவில் வந்து சூட்சுமமாக வழிபடுவதாக நம்பப்படுகிறது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்றுஇத்தலத்துக்கு வந்து வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும். மனக்குழப்பம் உள்ளவர்கள், வாழ்வில் சகலசம்பத்துகளும் பெற இத்தலத்து இறைவன் கிருபா கூபாரேச்வரரையும்  தாயார் அன்ன பூரணியையும்  வணங்கலாம்.

Sharing is caring!