அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தன்னடக்கத்தோடு இருப்பவர்கள்

ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட உள்ளங்கை வடிவமுடையது அஸ்தம் நட்சத்திரம். இந்நட்சித்திரத்தைக் கொண்டவர்கள் ராசியில் கன்னியைக் கொண்டிருப்பார்கள். சந்திரனின் ஆதிக்கத்தில் இரண்டாவது நட்சத்திரம் அஸ்தம்…

அஸ்தம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் செவ்வாயை அம்சமாக கொண்டிருப்பீர்கள். எல்லா இடங்களிலும் நேர்மையுடனும் உண்மையுடனும் இருப்பீர்கள். பொய்மையை விரும்ப மாட்டீர்கள். மனதில் கள்ளங்களை வைத்திருக்கமாட்டீர்கள். பிடித்த கொள்கையில் இருந்து நழுவமாட்டீர்கள்.. புகழோடு வாழ்வீர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தைக் கொண்டிருக்கும் உங்களுக்கு சுக்கிரன் அதிபதியாக இருப்பீர்கள். எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். எந்த நேரமும் சுகமாகவே இருக்க விரும்புவீர்கள். தைரியசாலிகளாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒருவித அச்சத்தோடே இருப்பீர்கள். தர்மநெறி தவறாமல் வாழவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக  இருப்பார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் புதனை அம்சமாக கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழிலில் அனுபவமிக்கவர்கள். எதையும் திறமையாக செய்யக்கூடியவர்கள். கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எல்லா துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கலைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டிருக்கும் உங்கள் அதிபதி சந்திரன். அன்பு, பொறுமை, பண்பு போன்ற நற்பலன்கள் உங்களிடம் பொதுவாகவே காணப்படும். பிறருக்கு உதவி செய்வதை விரும்புவீர்கள். தலைமை பண்பை தாங்கி நடத்தும் திறமை உங்களுக்கு இருக்கும்.

அஸ்தம் முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதத்தைக் கொண்டிருப்பவர்களின் பொதுவான குணநலன்கள்.. கடுமையாக உழைப்பதையே விரும்புவீர்கள். எதிலும் அவசரமின்றி நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். பெரிய பதவிகளைப் பெற்றாலும் தன்னடக்கத்தோடு இருப்பீர்கள். கம்பீரமான தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பதால் சமூகத்தில் பெரிய பதவியைப் பெறுவீர்கள். இரக்க குணம் கொண்டிருப்பதால் எல்லோருக்கும் தகுந்த நேரத்தில் உதவி செய்வீர்கள். சுயநலம் கருதாது பிறருக்காக உதவும் மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள்.

Sharing is caring!