ஆசையில்லாவிட்டால் மகாலஷ்மியின் அருளை பெறலாம்..

இறைவனிடம் என்ன கேட்கலாம்? எல்லாமே கேட்கலாம். கேட்டவை கிடைக்க வேண்டும் என்று நமக்கு விதித்திருந்தால் இறைவனின் அருளால் அவை தடையின்றி கிடைக்கும். மாறாக அதைப் பெறுவதற்கு சில காலம் பொறுத் திருக்க வேண்டுமென்றால் அதையும் நாம் கடந்தே பெறவேண்டும். ஆனால் இறை நம்பிக்கையில் ஆழ்ந்து இருப்பவர்கள் சற்றே யோசித்து பாருங்கள்.

முக்காலமும் உணர்ந்தவனுக்கு தெரியாதா நம்மை எப்படி காக்க வேண்டும் என்று..? இறைவனின் முன்பு நின்று தரிசிக்கும் போதே நம்மை முழுவதுமாக அர்ப்ப ணித்து விடுகிறோம். அப்படியிருக்கும் போது எனக்கு இது வேண்டும் இப்படி செய்தால் நான் இதை உனக்கு தருகிறேன் என்றெல்லாம் பிரார்த்திப்பது இறை வனின் மனதை உருக்க செய்யுமா? அவரது அருள் பார்வை நமக்கு கிடைக் குமா?

மகாலஷ்மியை வணங்கினால் வற்றாமல் செல்வம் அருளுவாள் என்று வேண்டி வேண்டி அழைக்கிறோம். உருகி உருகி வழிபடுகிறோம். லஷ்மியை வீட்டில் தங்கவைக்கஆன்மிகத்தில் கடைப்பிடிக்கும் அனைத்து வழிமுறைக ளையும், பூஜைகளையும், ஸ்லோகங்களையும் உச்சரிக்கிறோம். ஆனால் மகா லஷ்மியின் கருணை பார்வை யாருக்கு கிடைக்கும் தெரியுமா? ஆசைப்படா தவர்களுக்கே.. இதை உணர்த்தும் கதை ஒன்றை பார்க்கலாமா?

பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அதற்கு முழு உதவியும் செய்தவர் மகாவிஷ்ணு. இவர்கள் கடலை கடைந்த போது  மகாலஷ்மி வெளிப்பட்டாள். பிரமிக்க வைக்கும் அழகும், வற்றாத செல்வங்களும் கொண்டு பார்ப்பவர்களை மயங்கவைத்த அவளை திருமணம் செய்துகொள்ள  அங்கிருந்த அனைவருக்கும் மனதுக்குள் ஆசை தோன்றியது. இந்திரனும், சூரியனும் மகாலஷ்மியிடம் வெளிப்படையாகவே தங்களது ஆசைகளை தெரிவித்தார்கள்.

சூரியபகவான் என்னுடன் இருந்தால் உலகமெங்கும் தினமும் சுற்றலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். மகாராணியாக வந்து தேவலோகத்தை ஆளலாம் என்றார் இந்திரன். இவர்களைப் பார்த்து எஞ்சி நின்ற மற்ற தேவர்களும் அவர்கள் பங்குங்கு ஆசைவார்த்தைகளைக் கூறினார்கள். ஆனால் மகாலஷ்மி யாரையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. நடந்த அனைத்தையும் கவனிக்காதது போல் உறங்கி கொண்டிருந்தார் மகாவிஷ்ணு.

தம்மிடம் இருந்த அழகையும் செல்வத்தையும் விரும்பியே தன்னை அடைய வந்த தேவர்களை காணாமல் இருந்த மகாலஷ்மியின் பார்வை உறங்கிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் பால் திரும்பியது. இத்தனை பேர் சுற்றி நின்று  தம்மை வர்ணிக்க எதுவுமே வேண்டாம் என்பது போல் அமைதியாக கண் உறங்கி ஆழ்ந்திருக்கும் இவரே எனக்குரியவர்.

Sharing is caring!