ஆடி அமாவாசை…..மறைந்த பின்னரும் தந்தையின் ஆசிபெறுவதற்காக…..

இறந்து போன முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளுக்கு சென்று திதி கொடுத்து வழிபாடு செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். தடைப்பட்ட திருமணம், நீண்டநாள்பட்ட நோய் நொடிகள், மனவருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும்.

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாயண காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும், விசேஷமானவை.

இந்த நாட்களில் முன்னோர்களையும் இறந்த தாய், தந்தையர்களை நினைத்து ‘திதி’ கொடுப்பது நல்லது. ‘பித்ரு’க்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது பெரிய பாவமாக கருதப்படுகிறது.

நமது முன்னோர்களான தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மரணம் அடைந்த பிறகு பித்ரு லோகம் சென்று விடுகின்றனர்.

பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது.

மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்த போது அவர்களை சரிவர கவனிக்காததால் அவர்கள் படும் துன்பம் பாவத்தின் வடிவில் கவனிக்க தவறியவர்களை சேருவதாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. இது பித்ரு தோஷம் எனப்படுகிறது.

பித்ருதோஷம் நீங்கவும், பித்ருக்கள் ஆன்மா சாந்தியடையவும் அவர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்றிட வேண்டும்.

இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்கள். உதவிகள் பல செய்து கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று தாய், தந்தையர்களை நினைத்து நீராடினால் தீவினைகள் அகலும்.

அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய்,

Sharing is caring!