ஆடி அமாவாசை வழிபாட்டின் சிறப்பும், முக்கியத்துவமும்!

நிறைந்த அமாவாசை அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக வளர்ந்து விருட்சமாய் வளரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அதை உணர்த்தும் மகாபாரத கதை ஒன்றை பார்க்கலாமா? குரு ஷேத்ர போருக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவன். துரியோதனன் போரில் வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று, சகாதேவனைக் கேட்டான். சகாதேவன், மனதில் கள்ளமின்றி துரியோதனன் எதிரியாக இருந்தாலும், கள பலி கொடுப்பது பற்றியும், அதற்கு பூரண அமாவாசை அன்று போரை தொடங்கினால் வெற்றி உறுதி என்றும் கூறினான்.

துரியோதனன் சகாதேவன் குறித்துக்கொடுத்த நேரத்தில் கள பலி கொடுத்து, பூரண அமாவாசை அன்று யுத்தம் தொடங்க ஆயத்தமானான். கிருஷ்ணர் முக்காலமும் அறிந்தவராயிற்றே. சகாதேவன், கூறியது போல் கெளரவர்கள் செய்து விட்டால் வெற்றி அவர்கள் பால் திரும்பிவிடுமே என்று உணர்ந்தார். இதை சரியான வழியில் திசை திருப்ப வேண்டும் என்று நினைத்தார்.

அமாவாசைக்கு முந்தையநாள்  குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய தொடங்கினார். சந்திரனுக்கும், சூரியனுக்கும் ஆச்சரியமாயிற்று. என்னவாயிற்று கிருஷ்ணபகவானுக்கு. நாளைதானே நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் நேரம். அப்படியெனில் நாளை தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவர் இன்று குளக்கரையில் உட்கார்ந்து உரிய சடங்குகளின் படி தர்ப்பணம் கொடுக்கிறாரே என்று நினைத்தார்கள். கையோடு இருவரும் இணைந்து கிருஷ்ண பகவானை நோக்கி வந்தார்கள்.

கிருஷ்ண பகவானே என்ன விளையாட்டு இது? அமாவாசை நாட்களில் அல்லவா தர்ப்பணம் கொடுப்பது முறையாகும். இன்று அப்படியொன்றும் இல்லையே. தாங்கள் இன்று தர்ப்பணம் கொடுப்பது சரியாகுமா? உங்களுக்கே நீங்கள் செய்வது முறையானதாக இருக்கிறதா என்று கேட்டார் கள்.

கிருஷ்ணபகவான் எதுவும் பேசாமல் அவரை பார்த்தார். ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அமாவாசை என்பது என்ன என்று கேட்டார். நானும் சூரியனும் இணைந்து ஒருவரையொருவர் சந்திப்பது அன்று தான் அமாவாசையாக கொண்டாடப்படுகிறது என்றார் சந்திர பகவான். அப்படியானால் நான் செய்தது சரி தான். இன்று தான் அமாவாசை.

Sharing is caring!