ஆண்களை பாதிக்கும் சிறுநீரக கற்கள்

சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. சிறுநீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம்.

சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற்கள் உருவாகலாம். ஆனால் சில நோய்கள் மற்றும் நிலைபாடு காரணமாக மருந்து எடுத்து கொள்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது, மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கால்சியத்தால் உருவானவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் உருவானவை. சிறுநீர் ஓட்டத்தின் அடைப்பும் கல் உருவாவதற்கு வழிவகுக்கும்.

கீல்வாதம் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து யூரிக் அமில கற்கள் உருவாக்க வழிவகுக்கும். சிறுநீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களும் கற்கள் வளரும் ஆபத்து அதிகரித்துள்ளது.

குடல் அழற்சி நோய் இருப்பவர்களுக்கு கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சிறுநீரக கற்கள் அதிகரிக்க ஆபத்து உள்ளது.

Sharing is caring!