ஆண்கள் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கிரீன் டீயில் பல வகைகள் உள்ளது. இருப்பினும் மூலிகைகள் மற்றும் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கிரீன் டீக்களை தேர்ந்தெடுத்தால் அதிக உடல்நல பயன்கள் கிடைக்கும்.

சமீப காலமாக வெளியிடங்கள் எங்கு சென்றாலும் கிரீன் டீ தரும் வழக்கம் அதிகமாகி வருகிறது. கேட்டால் இது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எல்லாரும் கூறுகிறார்கள்.

உலகிலேயே ஜப்பானியர்கள் தான் க்ரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள். இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு க்ரீன் டீயில் உள்ள உட்பொருட்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம்.க்ரீன் டீ மிகவும் சுவையுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் முதல் பிறப்புறுப்பு பிரச்சினைகள் வரை பலவித வழிகளில் இது உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

  • தினமும் கிரீன் டீ குடிக்கும் ஆண்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்குமாம்.
  • குறிப்பாக இதயம், கல்லீரல், எலும்பு மூட்டுகள் போன்றவற்றில் நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
  • ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும் மூல பொருள் கிரீன் டீயில் இருப்பதால் தான் ஆண்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்கிறது.
  • ஆண்களின் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் கரைந்து விடுமாம்.
  • வயதாகாமல் தடுக்கிறது. மேலும், முகத்தின் பொலிவையும் இது இரட்டிப்பாக செய்கிறது.
  • ஆண்களின் உடல் முழுவதும் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த கிரீன் டீ ஒரு அற்புத மருந்தாக வேலை செய்கிறது.

Sharing is caring!