ஆதிக்கம் செலுத்தும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் !

ஆயில்யம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரக்கூட்டங்களைக் கொண்டது. இந்நட்சத்திரத்தைக்  கொண்டவர்கள் கடக  ராசியை உடையவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அதிபதியாக  கொண்டிருப்பீர்கள். குருவால்  அறிவு நிரம்ப பெற்று புகழின் உச்சிக்கும் செல்வீர்கள். விஞ்ஞானிகளாக வேண்டும் என்னும் கனவுகளை  கொண்டிருப்பீர்கள்… எப்போதும் உங்களை புகழ வேண்டும்  என்னும் எதிர் பார்ப்பைக் கொண்டிருப்பீர்கள்.. கோபமும் இருக்கும் குணமும் இருக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டிருக்கும் உங்களுக் கான அதிபதி சனிபகவான்… எப்போதும் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் சுகம் மட்டுமே முக்கியமாக வாழ்வீர்கள்.. நீங்கள் செய்யும் தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினாலும்  ஒப்புக்கொள்ளாமல் நியாயப்படுத்தவே முயற்சிப்பீர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள்  இரண்டாம்  பாதத்தினரைப் போலவே சனிபகவானை அதிபதியாக கொண்டிருப் பீர்கள். தற்பெருமை கொண்டிருப்பீர்கள்.. நீங்கள் சொல்வதும் செய்வதும்  சரி  என்பதால் பிறரது தலையிடுகளை உங்கள் வாழ்க்கையில்  அனுமதிக்க மாட்டீர் கள்.. அனுபவமிக்கவர்களின் அறிவுரையைக் கேட்டால்  உங்கள் வாழ்க் கையில் திருப்பம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் குரு பகவானை அம்சமாக கொண்டவர்களாக  விளங்குவீர்கள்..   வல்லவரான நீங்கள்  எதிர்மறை எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுவீர்கள். இயல்பிலேயே திறம் படைத்த நீங்கள்   உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பீர் கள். திட்டமிட்டு செயல்பட்டால்  மட்டுமே வெற்றிக்கனியைப் பறிப்பவர்களாக திகழ்வீர்கள்.

ஆயில்யம்  நட்சத்திரத்தைக் கொண்டவர்களான நீங்கள் திறமையில் வல்லு நர்கள். திட்டமிடாமல் செயல்படுவதாலேயே  வெற்றியை அடைவதில் தடை களை உண்டாக்கிகொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்களை வளரவிடாமல் செய் தால்  சமூகத்தில்  உயர்ந்த நிலையை அடைவீர்கள்.நேர்வழியை விட குறுக்கு வழியில் நினைத்ததைச் சாதிக்க  முயலுவீர்கள்.. பிறர் மீது  ஆதிக்கம் செலுத்து வதும் இயல்பிலேயே காணப்பட்டாலும் சிந்தித்து செயலாற்றினால் எல்லாமே ஜெயம்தான்.

Sharing is caring!