ஆப்பிள் உடலுக்கு ஆபத்தா..? மக்களே கவனம்..!!

நமது உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரையே பார்க்க தேவை இல்லை என பழமொழி கூட உண்டு. அந்த அளவிற்கு ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆனால், அதே ஆப்பிள் பழம் நம் உயிருக்கும் உலைவைக்கும் ஆபத்தானதாக மாறி வருகிறது. ஆம், ஆப்பிள் பழங்கள் இயற்கை தன்மையுடன் நமக்கு வந்து சேருவதில்லை.

செயற்கையாக மெழுகு முலாம் பூசப்பட்ட பழங்களே நமக்கு வந்து சேர்க்கிறது.

மிகப்பெரிய தொட்டியில் இளஞ்சூட்டுடன் இருக்கும் மெழுகு கலவையில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டு மெழுகு தடவப்படுகிறது. இவாறு செய்வதனால் ஆப்பிள் பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் தடுக்கப்படுகிறது. மேலும், ஆப்பிள் பலத்தை பார்ப்பதற்கு மிகவும் பளபளப்புடன் பார்த்ததும் சாப்பிடவேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட ஆப்பிள் பழத்தை அதிகம் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், குடல் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இது, மெல்ல கொல்லும் விஷம் போன்றது என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

Sharing is caring!