ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்…!

கந்தர்வன் ஒருவன் துர்வாசமுனிவரின் நடையைப்பார்த்து  நண்டு போலவே நடக்கிறீர்கள் என்று  சொன்னதோடு நடந்தும் காட்டி ஏஎளனம் செய்தான். கோபம் கொண்ட துர்வாசர் “நீ நண்டாக  பிறப்பது” என்று சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்ட துர்வாசரின் அறிவுரைப்படி நண்டு வடிவில் பூஜை செய்து சாப நிவர்த்தி பெற்றான். நண்டு துளைத்த சுவாமியின் திருமேனியை இப் போதும் காணலாம்.   கற்கடகத்துக்கு சாபத்திலிருந்து விமோசனம் தந்தவர் என்ப தால் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். கடக ராசிக்கு உட்பட்ட ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கற்கடேஸ்வரரை வழி பட்டு தோஷங்ள் நீங்க பெறலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருந்துதேவன்குடி ஊரில் உள்ள அருள்மிகு கற்கடேஸ் வரர் திருக்கோயிலுக்கு நேரம் கிடைக்கும் போது ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் சென்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். அபிஷேகம் செய்யப்படும் எண்ணையை உடலுக்குள் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள நோய்கள் நீங்கும் என்பது ஐதிகம்.

இத்தல இறைவன் அனைத்து பிணிகளையும் நீக்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இப்பகுதியை ஆட்சியை செய்த சோழமன்னன்     வாத நோயால் அவதிப்பட்டான். எத்தகைய மருந்தும் அவனுக்கு கைகூடவில்லை. சிவபக்தனான அவன் சிவனை சரணடைந்தான்.  ஒருநாள் அரசவைக்கு வந்த வயதான தம்பதி யர்  தாங்கள் மருத்துவர்கள் என்று அறிமுகப்படுத்தி  தண்ணிரில் விபூதியைக் கலந்து கொடுத்து மன்னனின் நோயை தீர்த்தார்கள். மன்னன் கொடுத்த பொன்  பொருள் வேண்டாம் என்று சொன்னவர்கள் மன்னனை இந்த இடத்துக்கு அழைத்து வந்து கோயில் கட்ட சொல்லி லிங்கத்தில் ஐக்கியமானார்கள். பின்பே வந்தது சிவன் பார்வதி  என்று உணர்ந்தான் மன்னன். சம்பந்தர் இவரை பிணி நீக்கும் சிவன் என்று பாடியுள்ளார்.

இத்தல மூலவர் கற்கடேஸ்வரர். தாயார்கள் அபூர்வநாயகி, அருமருந்துநாயகி. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். கோவில்களில் ஒரு அம்மன் மட்டுமே இருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கிறார்கள். கோயில் நுழைவு வாயிலில்  உள்ள சந்திரன் யோக நிலையில் இருப்பதால் யோக சந்திரன் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் கற்கடக  விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன்  சுப்ரமணியர், நடராஜர் இருக்கிறார்.  இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்… நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரத்திலும்இத்தலத்து இறைவனிடம் வழிபாடு செய்யலாம். இத்தல இறைவனை தரிசித்தால் மனதில் ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும்.  தேய்பிறை அஷ்டமி, அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமை   நாட்களில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பு சேர்க்கும்.  உடல் ஆரோக்யம் காக்க பிணி தீர்க் கும் சிவனும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு ஆரோக்யம் காக்கலாம். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தோஷங்கள் நீங்கி துன்பங்களைப் போக்கி கொள்ள கற்கடேஸ்வரர் அருள் புரிவார்.

Sharing is caring!