ஆரோக்கியத்தை உயர்த்தும் இரும்பு சத்துக்கள் நிறைந்த பழங்கள்

திருச்சி:
ஆரோக்கியத்தை உயர்த்தும் அற்புத பழங்கள் பற்றி தெரியுங்களா? இதில் இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச்சத்து மிக மிக முக்கியம். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் பலவித பிரச்னைகள் ஏற்படும். முக்கியமாக உடல் அசதி, முடி கொட்டுதல், போன்ற பிரச்னைகள் உண்டாகும. இதை போக்க இரும்பு சத்து அதிகம் கொண்ட பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதோ உங்களுக்காக!

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புசத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது.மேலும் இதில் கால்சியம், ப்ரோடீன், நார்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதேபோல் மாதுளையும் இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறந்த பழம் ஆகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புசத்து நிறைந்துள்ளது. புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின்,பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்னை இருக்கவே இருக்காது. முக்கியமாக ஆண்களுக்கு அத்திப்பழம் மிகவும் நல்லது.

பழங்களில் மிகச்சிறந்த பழம் கொய்யாப்பழம் ஆகும். மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யப்பழம். இதில் இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் கொய்யாப்பழத்திற்கு ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உள்ளது.

உலர் திராட்சை மற்றும் இதர பழவகைகளில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர் திராட்சை உண்டு வந்தால் உங்களுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான எடை அதிகரிக்க உதவும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!