ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி?

அளவுக்கு அதிகமான அளவுகளில் உடல் எடை இருப்பதைத் தான் உடல் பருமன் என்கிறோம். நம் உடம்பில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது உடல் நலத்துக்கு ஆபத்தானது.  நாளடைவில் இப்படி சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பு, நோயாகவும் மாறக் கூடிய அபாயம் இருக்கிறது. தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகையவர்கள், உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ டயட் என்கிறப் பெயரில் சமயங்களில் சாப்பிடாமல் முழுதாய் பட்டினிக் கிடந்து தவிப்பார்கள். இப்படியெல்லாம் செய்வதால் நிச்சயமாக எந்த விதமான பலனும் கிடைக்காது. நாளடைவில் எரிச்சலும், கோபமும் தான் அதிகரிக்கச் செய்யும்.

உடல் பருமனுக்கான காரணங்கள்:  
அதிகமாக உணவை உட்கொள்ளுதல், தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாதது, வாழ்முறை, உணவு பழக்க வழக்கங்கள், ஒரே இடத்தில் அமர்ந்த படியே நாள் முழுவதும் வேலைப் பார்ப்பது என்று பல காரணங்களால் உடல்பருமன் ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பதால், மனித உடலில், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. தோற்றப் பொலிவையும் இழந்து விடுகிறோம். முக்கியமாக இதன் பலனால் நோய்களும் அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது.

மூச்சுத்திணறல், வலி, மாரடைப்பு, புற்றுநோய், குடலிறக்கம், உறக்கமின்மை, சுவாசத்தில் பிரச்சனை, மலட்டுத்தன்மை என்று தொடரும் நோய்கள் வந்து சேர்கின்றன.

Sharing is caring!