ஆரோக்கியமான வாழ சில வழிமுறைகள்..!!

நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்தாக வேண்டும்.

காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்.
நினைத்த நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதுமானது.

உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்திய பிறகு கட்டாயம் துவைத்துக் காய வையுங்கள்.

காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படத்தி செய்த உணவுகளை உண்ணாதீர்கள். அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

குளிர் பானம், பெக்கெட் உணவுகளை தவருங்கள்.

பொய்லர் கோழி இறைச்சிகளை தவிருங்கள். மீன், நாட்டுக்கோழி அல்லது ஆட்டிறைச்சி சாமிடலாம்.

மது, புகை கூடவே கூடாது.

மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சுக்குக் கோபி குடிப்பது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாக சமிப்பாடு அடையும் முன்பு அடுத்த உணவு உண்ண வேண்டாம்.

பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

பயோட்டின் என்ற விட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, கோலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.

Sharing is caring!