ஆறுபடை வீடுகளில் ஆடி மாதம் காவடி…

வேண்டுதலை  நிறைவேற்றிய முருகப்பெருமானுக்கு, நிவர்த்திக் கடனாக பக்தர்கள் செய்யும் பிரார்த்தனைகளில் ஒன்றுதான் காவடி தூக்குவது. பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, மச்ச காவடி என காவடிகள் பலவகைகள் உண்டு.

ஆடி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என, ஆறுபடைவீடுகளில் ஆடிக் கிருத்திகையின் போதும், மாதம் முழுவதும் பக்தர்கள் காவடி தூக்குவார்கள்.
கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் முருகனின் திருவடி. கா என்பது இரு புறமும் தொங்கும் சுமை.

காவடி உருவான கதை தெரியுமா?
அகத்திய மாமுனிவர் இமயமலைச் சாரலில் இருந்த இரண்டு மலை சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் இன்னொன்றை சக்தியாகவும் வழிபட்டு வந்தார். அவை சிவகிரி என்றும் சக்திகிரி என்றும் அழைக்கப்பட்டது. அந்த இரு மலைகளையும் பொதிகை மலைக்கு கொண்டுவர விரும்பினார். அத்தகைய பலம் தருவதற்கு முருகப்பெருமானை வழிபட்டார்.

முருகன் அருளால் அந்த இரண்டு சிகரங்களையும் தூக்கிக்கொண்டு கேதாரம் வரை வந்தவர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது இடும்பனும் அவன் மனைவி இடும்பியும் அகத்தியரை வணங்கி அருள்புரிய வேண்டினார்கள். அகத்தியர் இடும்பனை நோக்கி இந்த இரண்டு மலைகளையும் தென் திசை நோக்கி பொதிகை மலையில் கொண்டு வந்து வைத்தால், உமக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

தாங்கள் சொல்வதை நிச்சயம் செய்கிறேன் என்ற இடும்பன், இரண்டு மலைகளையும் தூக்க முனைந்தான். ஒரு மலையையும் அசைக்கமுடியவில்லை.வலிமை மிக்க இடும்பனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை மலைகளை தூக்கியிருப்பேன் இந்த மலைகளை அசைக்க கூட முடியவில்லையே என்று.

Sharing is caring!