ஆளுமை மிக்க குழந்தையாக வளர்க்க…..

5 வயதுக்கு பின்பு குழந்தைகளை
தன் வேலையை தானே செய்ய பழக்க வேண்டியது குழந்தைகளுக்கான வாழ்வியலை கற்றும் தரும் கடமை…

அங்க இருந்துதான் பெற்றோர்கள் சறுக்க ஆரம்பிப்பது..

குளிக்க,
தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ள,
உணவருந்த
,உறக்கம் கொள்ள என்று அனைத்திற்கும் பழக்கப்படு்த்த வேண்டும்….
உடன் இருந்து உதவலாம்
தடுமாறும் பொழுது….

அய்யோ குழந்தை தடுமாறுதே என ஓடிப் போய் தூக்கி பிடித்து சுமக்க ஆரம்பித்தால் ….

அங்கே பெற்றோர்கள்
பாசத்தில் ஜெயிக்கலாம் …
ஆனால் உங்கள் குழந்தையை சிறந்தவனா/ளாய் உருவாக்குவதில் மொத்தமாய் தோற்பீர்கள்….

வளர வளர தன்னை பார்த்துக்கொள்ள குழந்தைக்கு தெரிய வேண்டும்….

எதற்கெடுத்தாலும் அம்மா அப்பா என நம்மை அண்டியே இருக்க கூடாது….

இதைத்தான் இன்று பாசமாய் பெருமையாய் நினைச்சிக்கிட்டு என்னையவே என் குழந்தை
சுத்தி வரும்ங்கனு பெருமை பேசி தோற்கிறார்கள்….

ஷூ போட *தடுமாறினால்* உதவிசெய்யுங்க,
உடை உடுத்த *தடுமாறினால்* உதவுங்க,

உண்ண,தலை வார, நடக்க,
புத்ததகைப் பையை சுமக்க என எல்லாற்றிலும் நீங்கள் வழிகாட்டுங்கள்…

அதை விடுத்து *நீங்களாகவே* குடு கண்ணு அம்மா மாட்டி விடறேன்
அப்பா தூக்கறேன்னு குழந்தைகளை மக்காக மந்தமாக உதவாக்கரையாக மாற்றாதீர்கள்….

ஸ்கூல் வாசலில் பாருங்க…

மாலை பள்ளி விட்டு வெளிய பசங்க
ஓடி வந்ததும் ஆத்தாக்காரிங்க என்னவோ பொதி மாடு மாதிரி கையில இருக்க பைகளை எல்லாம் அவங்க கிட்ட தந்துட்டு குழந்தை ஹாயாக போகும்….

இது உன் சுமை நீ சமந்து வான்னு
ஏன் சொல்ல மாட்டேங்கிறாங்க
எந்த பெற்றவங்களும்…

நம் காலத்தில் நம் பெற்றவர்கள் இப்படியா நம்மை வளர்த்தார்கள்…. நாமளா ஸ்கூல் போவோம்
பொடி நடையா நடந்து….
வீட்டுக்கு நாமளா தான நம்ம பையை திருப்பி கொண்டு வந்து வைக்க வேண்டிய இடத்துல வச்சிட்டு உடுப்ப மாத்தி கை கால கழுவி விளையாட ஓடுவோம்….

எனக்கு தெரிஞ்சு ரொம்பவே வாழ்ந்து வளர்ந்தோம்….

குழந்தைய பொத்தி வளர்க்கிறேன்
பாசம் காடடுகிறேன் என்ற பெயரில் கையாலாத்தனமா வளத்து வைக்கிறாங்க இப்பலாம்….

இதுங்க வளர்ந்த பின்
மணவாழ்விலும் தோல்வி
பெர்சனல் வாழ்விலும் தோல்வி….

உடனே தீர்வு
விவாகரத்து
தற்கொலை
இல்லைனா பிடிக்கலைனு சொல்றவங்கள கொலை…..

ஏன்னா இவ வீட்லயும் செல்லம்னு
தூக்கி வச்சி எந்த தோல்விகளும்
கஷ்டம் தெரியாம மண்ணு போல வளர்த்து வைக்கிறது….

அவன் வீட்லயும் அதே மண்ணு வளர்ப்பு….

#மண்ணு_கூட_கலப்பை_கொண்டு_
#உழுதால்_தான்_அது_விவசாயத்துக்கு_
#ஏற்றதாய்_மாறும்

#இல்லையென்றால்_
#அது_தருசு_நெலம்_தான்

உங்கள் குழந்தைகளை உண்மையில் நீங்கள் நேசித்தால்
கண்டிப்புடன் நேசியுங்கள்….

#பாசம்என்பது #அக்கறைகொள்வது…. தடவி தந்து தடவி தந்து வளர்ப்பது
பாசம் அல்ல
#மெல்லகொல்லும்விஷம்….

இன்றுள்ள 35 வயதை கடந்தவர்கள் நிச்சயம் சொல்வார்கள்

என் பெற்றோரின் கண்டிப்புதான்

இன்று நான் இப்படி வாழ்கிறேன் என…

இப்ப வளருறதுங்க அதை நிச்சயம் சொல்ல மாட்டார்கள்…

*என்னை எங்க அம்மாலாம்*
*ஒரு வார்த்தை சொன்னதில்லை*
*ஆனா நீயெல்லாம் பேசறியா என்று தான் ஆசிரியர்,*
*மேலதிகாரி,*
*வாழ்க்கை துணை என அனைவரிடமும் சொல்வாங்க சொல்றாங்க…… இதற்கு காரணமானவர்கள் நீங்கள் தான் என்பதே மிக வேதனையான விஷயம்….*

இப்ப நடுவுல ஒரு தலைமுறை இப்படி தான் வளந்து நிக்குது….

கொலை கொள்ளை தற்கொலையின் நாயக நாயகியர்கள் இவர்களே….

இனியாவது #உணர்ந்துமாறுங்கள்
#செழுமையாய்இருக்க….

Sharing is caring!