ஆஸ்துமாவை விரட்டும் மூலிகை..!!

பட்டர்பர் என்ற மூலிகையை பயன்படுத்தி ஆஸ்துமாவை எளிதாக விரட்டலாம்.

அரிதான மூலிகைகளில் ஒன்றாக இருக்கும் பட்டர்பர், நாசி மாற்றும் கண் ஒவ்வாமை அறிகுறிகளை அகற்றுவதில் பெரும்பாலும் பயன்படும்.

அத்துடன் ஆஸ்துமா, சுவாசப் பாதை அழற்சி ஆகியவற்றையும் பட்டர்பர் விரட்டக் கூடியது. மேலும் ஒற்றை தலைவலியை 50 சதவிதம் வரை குறைக்கக் கூடியது.

எப்படி உபயோகப்படுத்துவது?

பட்டர்பர் மூலிகையை ஒரு நாளைக்கு 75 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி சரியாகிவிடும். எனினும், 50 மில்லி கிராம் அளவை ஒருநாளைக்கு எடுத்துக் கொண்டாலும் ஒற்றைத் தலைவலி குணமடையும்.

ஆனால், உடனடி தீர்வு இதன்மூலம் கிடைக்காவிட்டாலும், சில வாரங்களில் நல்ல பலனை காணலாம்.

குறிப்பு

பச்சையாக இருக்கும் பட்டர்பர் மூலிகையில் பைரோலிசிடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. எனவே இவை கல்லீரலை பாதிக்கும் என்பதால், சரியான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

ராக்வீட், சாமந்தி, கிரிஸான் தமம் அல்லது டெய்லி மலர்கள் உங்களுக்கு ஒவ்வாமை தரும் என்றால், பட்டர்பர் மூலிகையையும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Sharing is caring!